மே 2010
அமெரிக்காவின் விண்ணோடம் அட்லாண்டிஸ் புளோரிடா விண்தளத்தில் இருந்து விண்ணுக்கு கடைசித் தடவையாக ஏவப்பட்டது.
12-நாள் பயணமாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கிச் செல்லும் இவ்விண்ணோடம் இரசிய விண்கலம் ஒன்றைக் கொண்டு சென்றுள்ளது. கென் ஹாம், கரெட் ரைஸ்மன், ஸ்டீவன் பவன், மைக்கல் குட், டொனி அண்டொனெலி, பயர்ஸ் செல்லர்ஸ் ஆகிய விண்வெளி வீரர்கள் இம்முறை அட்லாண்டிஸ் விண்ணோடத்தில் சென்றுள்ளனர். சென்ற வெள்ளிக்கிழமையன்று மாலை 2:20 மணிக்கு (18:20 UTC) இவ்விண்ணோடம் ஏவப்பட்டது.
அட்லாண்டிசின் இப்பயணத்தை அடுத்து நாசாவின் டிஸ்கவரி, மற்றும் எண்டெவர் ஆகிய விண்ணோடங்கள் ஒவ்வொன்றும் ஒரு முறை விண்ணுக்குச் செலுத்தப்படவுள்ளன. இதனையடுத்து விண்ணோடங்களின் பயணங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னர் இவை அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்படும்.
பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கும் அப்பால், அதற்கு அப்பால் செவ்வாய்க் கோளை நோக்கி மனிதனை அனுப்பும் புதிய திட்டத்தை அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா சென்ற மாதம்
அட்லாண்டிஸ் விண்ணோடம் முதன் முதலாக 1985, அக்டோபர் 3 இல் விண்வெளிக்கு ஏவப்பட்டது. அதன் பின்னர் 32 தடவைகள் அது ஏவப்பட்டுள்ளது. மொத்தம் 186,315,249 கிலோமீட்டர் தூரம் அது பயணித்திருந்தது. 4,462 தடவைகள் அது பூமியின் சுற்று வட்டத்தில் சுற்றி வந்துள்ளது.
தற்போதைய பயணத்தில் 7 மீட்டர் நீள “ரஸ்வியெத்” என்ற இரசிய விண்கலம் ஒன்றை பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பொருத்துவதற்காக எடுத்துச் சென்றுள்ளது.