தமிழ்நாட்டில் அண்ணாபல்கலைக் கழகத் துணைவேந்தர், அண்ணா பல்கலை வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று தடை கொண்டு வந்த போது, அது குறித்து மாணவர்கள் பலமான எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று அது கண்டும் காணாமல் விடப்படுகிறது. ஆனால் சுயநிதிக் கல்லூரிகள் பலவற்றில் இந்த தடை மிகவும் கவனமாகப் பின்பற்றப்படுகிறது. பறிமுதல் செய்யப்படும் மாணவர் களின் மொபைல் போன்கள், படிப்பு முடித்துவிட்டுச் செல்லும்போதுதான் திரும்பத் தரப்படுகிறது.
பள்ளி ஒன்றில் மொபைல் போன் கொண்டு சென்றதற்காக, 13 வயது மாணவி ஒருத்திக்கு 90 கசையடிகளும் இரண்டு மாதத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் அல்ல; சவுதி அரேபியாவில். பெண்கள் பயிலும் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
Blog Archive
Monday, February 8, 2010
பள்ளிக்கு மொபைல் எடுத்துப் போனால் சவுக்கடி
இத்தாலியர்களும் ஜோதிடத்தில் அதிக மோகம்
இத்தாலியர்களும் ஜோதிடத்தில் அதிக மோகம்
லண்டன்: தங்களது எதிர்கால வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்வதற்காக இத்தாலியர்கள் ஜோதிடத்துக்காக அதிகம் செலவழிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒரு ஆய்வு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்கள் எல்லாம் மீண்டும் தங்கள் பிரச்னைக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஜோதிடர்களை நாடுகின்றனர். சீட்டு போட்டு பார்ப்பது, சோழியை உருட்டி எதிர்காலத்தை கணிப்பது என்பது போன்ற பல்வேறு முறைகளில் இவர்கள் தங்களின் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்.
கிட்டதட்ட 30 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவரும் ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை ஜோதிட பலனுக்காக செலவிட்டுள்ளனர். குறிப்பாக மிலன் மற்றும் லேசியோ பகுதியில் உள்ளவர்கள் அதிக அளவில் ஜோதிடம் பார்த்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதி ஜோதிடர்களுக்கு ஓராண்டில் 600 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளது.இதில், 40 வயதுகளில் உள்ள நபர்கள் தான் ஜோதிடம் அதிகம் பார்த்துள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.சிந்து எழுத்து முறையில் இருந்து வந்ததே தமிழி முறை : ஆய்வாளர்
சென்னை : ""தென்னிந்திய மக்களுக்கு சிந்து எழுத்து முறை தெரிந்திருந்தது என்பது உறுதி. ஆகவே தமிழி எழுத்துமுறை சிந்து எழுத்து முறையிலிருந்து வந்து தான் உருவாகி இருக்கும்,'' என்று சிந்து எழுத்து ஆய்வாளர் பூரணசந்திரஜீவா கூறினார்.சென்னையில் தமிழ் வளர்ச்சி வளாகத்தில் தொல்லியல் துறை கருத்தரங்கு நேற்று நடந்தது. இதைத் தொல்லியல்துறை முதன்மை செயலர் ஸ்ரீதர் துவக்கி வைத்து பேசியதாவது: நமது எழுத்து வளர்ச்சி எங்கு துவங்கியது என்ற கேள்வி உள்ளது. சிந்து எழுத்திலிருந்து வந்ததா அல்லது இந்த சிந்து எழுத்து இடையில் வந்ததா என்ற கேள்வியும் உள்ளது. மயிலாடுதுறைக்கு அருகில் செம்பியன் கண்டியூரில்கிடைத்த கல்வெட்டில் நான்கு குறியீடுகள் கிடைத்தன. சிந்து எழுத்து குறியீடுகள் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறியீடுகளை வைத்து காலத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்றாலும், எதை உணர்த்துகிறது என்று தெளிவாக தெரியவில்லை. சிந்து எழுத்து ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இவ்வாறு ஸ்ரீதர் பேசினார்.
நிகழ்ச்சியில், "சிந்து எழுத்தும் தமிழியும்- ஓர் ஒப்பாய்வு' என்ற தலைப்பில், சிந்து எழுத்து ஆய்வாளர் பூரணசந்திர ஜீவா பேசியதாவது: சிந்து எழுத்து முறை, படங்களை அடிப்படையாக கொண்டது என்கின்றனர். இது முழுவதும் படங்களால் ஆன எழுத்துக்கள் அல்ல. முழுமையாக எல்லா எழுத்தும் செயற்கை வடிவங்களால் ஆனது. செயற்கை வடிவம் மட்டுமல்லாமல், வடிவியல் கணித அடிப்படையில் வடிவங்களாக சிந்து எழுத்துக்கள் உள்ளன. இதற்கு காரணம் சிந்துவெளி மக்கள், நகர அமைப்புகளை வடிவமைக்கும் கட்டடக் கலையில் மிகச் சிறந்த அறிவு பெற்றிருந்தனர். இந்த அறிவை பயன்படுத்தி எழுத்துகளுக்கு செயற்கையான வடிவங்களை அமைத்தனர். எனவே, இந்த வடிவங்களுக்கு கொடுத்த பொருள் பொருந்தாமல் போய்விட்டது.
இந்த சிந்து எழுத்து வடிவங்கள் தமிழி என்ற எழுத்து வடிவங்களுடன் பொருந்துகின்றன. இரண்டையும் ஒப்பிட்டு சிந்து எழுத்தை படிக்க முயற்சிக்கலாம் என்பது உறுதி. தமிழகத்தில் சிந்து எழுத்து வடிவங்கள் பெருமுக்கல், கீழ்வாலை, பொதிகைமலை குகை, இலங்கையில் யாழ்பாணத்தில் ஆணைக்கொட்டடி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. தென்னிந்திய மக்களுக்கு சிந்து எழுத்து முறை தெரிந்திருந்தது என்பது உறுதி. ஆகவே தமிழி எழுத்துமுறை சிந்து எழுத்து முறையிலிருந்து வந்து தான் உருவாகி இருக்கும் என்பது உறுதி. இவ்வாறு பூரணசந்திர ஜீவா பேசினார்.