Monday, February 8, 2010

பள்ளிக்கு மொபைல் எடுத்துப் போனால் சவுக்கடி

பள்ளிக்கு மொபைல் எடுத்துப் போனால் சவுக்கடி

தமிழ்நாட்டில் அண்ணாபல்கலைக் கழகத் துணைவேந்தர், அண்ணா பல்கலை வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று தடை கொண்டு வந்த போது, அது குறித்து மாணவர்கள் பலமான எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று அது கண்டும் காணாமல் விடப்படுகிறது. ஆனால் சுயநிதிக் கல்லூரிகள் பலவற்றில் இந்த தடை மிகவும் கவனமாகப் பின்பற்றப்படுகிறது. பறிமுதல் செய்யப்படும் மாணவர் களின் மொபைல் போன்கள், படிப்பு முடித்துவிட்டுச் செல்லும்போதுதான் திரும்பத் தரப்படுகிறது.
பள்ளி ஒன்றில் மொபைல் போன் கொண்டு சென்றதற்காக, 13 வயது மாணவி ஒருத்திக்கு 90 கசையடிகளும் இரண்டு மாதத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் அல்ல; சவுதி அரேபியாவில். பெண்கள் பயிலும் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.