Sunday, February 7, 2010

நோயாளிக்கு ஆயுள் அதிகமாம்: டாக்டருக்கு தான் குறைவாம்

நோயாளிக்கு ஆயுள் அதிகமாம்: டாக்டருக்கு தான் குறைவாம்
பிப்ரவரி 08,2010

மும்பை:எல்லோரது நோய்களையும் நீக்கி வாழ்வு தரும் டாக்டர்களின் ஆயுசு,சராசரி மக்களை விட கம்மிதான் என்றால் நம்ப முடிகிறதா...? சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு இத்தகவலை தெரிவித் துள்ளது.இந்திய மருத்துவக் கழக (ஐ.எம்.ஏ.,)த்தின் புனே பிரிவு, "சமூகப் பாதுகாப்புத் திட்டம்' என்ற நிகழ்ச்சியின் கீழ் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 5,500 டாக்டர்களும், இந்தியா முழுவதும் 11 ஆயிரம் டாக்டர்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.ஐ.எம்.ஏ.,யின் புனே பிரிவுத் தலைவர் டாக்டர். சாரதா இந்த ஆய்வு பற்றிக் கூறியதாவது:கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சராசரி இந்தியனை விட ஒரு டாக்டரின் ஆயுள் குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளது.சராசரி இந்தியர் 69 லிருந்து 72 வயது வரை வாழ்கிறார். ஆனால் டாக்டர் 55 லிருந்து 59 வயது வரைதான் வாழ்கிறார்.டாக்டர்களில் பெரும்பாலோர் மாரடைப்பால் தான் மரணம் அடைகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிராவில் 12 லிருந்து 15 டாக்டர்களும், இந்தியாவில் 30 டாக்டர்களும் 59 வயது வரைதான் வாழ்கின்றனர்.இதற்கு, மனஅழுத்தம், ஒரு நாளில் பெரும் பான்மையான நேரங்களில் உட்கார்ந்தே வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாதது ஆகியவைதான் காரணம்.இதன் விளைவாக, உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை ஏற்படுகின்றன. இதனால் ஆயுள் குறைந்து விடுகிறது.இவ்வாறு டாக்டர். சாரதா தெரிவித்தார்.இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க, ஐ.எம்.ஏ., சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மும்பையிலுள்ள கைவல்ய யோகா இன்ஸ்டிடியூட், கிருத பாரதி, தேசிய ஒருங்கிணைந்த மருத்துவக் கழகம், ஆயுர்வேத வியாசபீடம் இவற்றோடு இணைந்து, புனேயிலுள்ள ராமன் பாக்., மைதானத்தில், கடந்த ஓர் ஆண்டுக் காலமாக சூரிய நமஸ்கார் பயிற்சியை டாக்டர்களுக்காக ஐ.எம்.ஏ., நடத்தி வருகிறது.இதுபோக, வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள், மனஅழுத்த மேலாண்மை மற்றும் நேர நிர்வாகம் குறித்த செமினார் ஆகியவற்றையும் ஐ.எம்.ஏ.,நடத்த உள்ளது.