Sunday, February 7, 2010

வேலை, பணம் தான் முக்கியம்:



வேலை, பணம் தான் முக்கியம்: குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் தம்பதியர் அதிகரிப்பு
பிப்ரவரி 08,2010,00:00 IST

General India news in detail

புதுடில்லி:"எங்களுக்கு வேலை தான் முக்கியம்; கைநிறைய சம்பாதித்து விட வேண்டும்; அப்புறம் தான் குழந்தை பற்றிய நினைப்பு வரும்' என்று நினைக்கும் இளம் தம்பதியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மனித வாழ்வில், திருமணம் மற்றும் , அதன் பின் குழந்தைப் பேறு என்பது மகிழ்ச்சியின் உச்சகட்டம் எனலாம்.ஆனால் தற்காலப் பொருளாதாரப் போட்டி உலகம், கண்ணிழந்தவன் பெற்ற செல்வம் போல, எல்லாம் இழந்த பின் தான் மனிதனை வாழ்க்கையைப் பற்றி நினைக்கத் தூண்டுகிறது. அந்த அளவுக்கு பணத்துக்கும் , வேலைக்கும் தான் முக்கியத்துவம் தரும் போக்கு அதிகரித்து விட்டது.வேலைக்குச் செல்லும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததனால் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்தாலும் குடும்பக் கட்டுக் கோப்பு குலைந்தது என்னவோ உண்மை. அதன் அடுத்த விளைவாக வேலைக்குச் செல்லும் தம்பதிகள், வேலையில் நல்ல நிலைமை அடைந்த பின்தான் குழந்தைப் பேறு பற்றியே சிந்திக் கின்றனர்.பொருளாதாரச் சுதந்திரம், தனிநபர் சுதந்திரம் இவற்றையடுத்து வேலைவாய்ப்பு பற்றிய கவலை இவை மூன்றும்தான் இன்று குழந்தைப் பேறு வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி தம்பதிகளை சிந்திக்க வைக்கும் முக்கிய காரணிகளாகியிருக்கின்றன.



இதுகுறித்து, இந்திய ஆலோசனைக் கழகத்தின் தலைவர் வசந்தா பத்ரி கூறுகையில்,"இந்தத் தம்பதிகள் தங்கள் மணவாழ்வின் ஆரம்பக்கட்டத்தில் குழந்தைப் பேற்றின் அருமை பற்றி உணர்வதில்லை.காலம் கடந்த பின், வாழ்வில் தனிமையை உணரும்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகின்றனர்' என்கிறார்.அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ தலைமை டாக்டர் அனிதா கவுல் கூறுகையில்,"கடந்த 35 ஆண்டுகளாக என்னிடம் வரும் நோயாளிகளில் 50 சதவீதத்துக்கு மேல் 35 வயதைக் கடந்தவர்கள். தங்கள் 40 வயதில்தான் பெண்கள் குழந் தைப் பேறு பற்றி நினைத்து என்னிடம் வருகின்றனர்.



இவர்களில் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்பவர் கள்தான். தங்கள் வேலையில் வெற்றி ஈட்டிய பின் தான் இவர் கள் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடிவு செய்கின்றனர்' என்கிறார்.மற்றொரு டாக்டர் பிதிகா பட்டாச்சார்யா கூறுகையில்,"தாமதமாகக் கருவுற்றவர்களாக என் னிடம் வருபவர்களில் அநேகர் தங்கள் வேலைக்காகக் குழந் தைப் பேற்றைத் தள்ளிப் போட்டவர்கள்தான்.பெண்களுக்கு 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுகளில் பல்வேறு மன,உடல் பிரச்னைகள் வருகின்றன. இவை பிறக்கப் போகும் குழந்தைகளையும் பாதிக்கும். குழந்தை "தாமதச் செயல்பாடு'(டவுன் சிண்ட் ரோம்), குரோமோசோம்களில் பிரச்னை என்பவற்றால் கடுமையாகப் பாதிக்கப்படலாம்' என் கிறார்.